மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

தேர்வில் தோல்வி: மூவர் தற்கொலை முயற்சி!

தேர்வில் தோல்வி: மூவர்  தற்கொலை முயற்சி!

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால்,கோவையைச் சேர்ந்த இரு மாணவிகளும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவியும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை வெளியிடப்பட்டன. 91.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 73,353 மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.

இந்நிலையில், கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்துவருபவர் செந்தில் குமார். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துவருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிவருகிறார். இவர்களது மகள் பிரியா (19) பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.

இதனால், யாரும் இல்லாத நேரம் பார்த்து நான்காவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துவிட்டார். இதையடுத்து, பிரியா கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கோவை சிங்காநல்லுரைச் சேர்ந்த வசந்த்பாபு என்பவரின் மகள் ஏஞ்சலின் ஜெனிபர். இவர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் மனம் உடைந்த மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் வீட்டில் கழிவறையில் வைத்திருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் பொன் பலவேசம் என்பவரின் மகள் முத்துலட்சுமி (16). இவர் குளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இன்று வெளியான தேர்வு முடிவில் இரண்டு பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால், மனமுடைந்த முத்துலெட்சுமி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தார். தற்போது,மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்தனர். சிபிஎஸ்இ ஆசிரியர்களைக் கொண்டு பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. அவர்கள் மிகக் கடினமான முறையில் விடைத்தாளை திருத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon