மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 ஜூலை 2020

வங்கி மோசடியில் தேடப்படும் குற்றவாளிகள்!

வங்கி மோசடியில் தேடப்படும் குற்றவாளிகள்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி ஆகிய இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரோடி கிளையில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி அவரது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிவிட்டார். இவர்கள் இருவரின் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மே 14ஆம் தேதி சிபிஐ சார்பாக மும்பை நீதிமன்றத்தில் நீரவ் மோடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரிகையில் நீரவ் மோடியைத் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அலகாபாத் வங்கியின் தற்போதைய தலைமைச் செயலதிகாரியும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியுமான உஷா அனந்த சுப்ரமணியனுடன் சேர்த்து வங்கியாளர்கள் இருவர் பெயர் இந்த மோசடி வழக்கில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மே 16ஆம் தேதி சிபிஐ சார்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட 12,000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையில் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன உரிமையாளரும் நீரவ் மோடியின் நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்தவருமான மெஹுல் சோக்சி நீதிமன்றத்தால் மிகவும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது குற்றப் பத்திரிகை இதுவாகும்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon