மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஹாக்கி பயிற்சியெடுக்கும் தப்ஸி

ஹாக்கி பயிற்சியெடுக்கும் தப்ஸி

தப்ஸி நடிக்கும் சூர்மா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தப்ஸி, அதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக அவர் இல்லையென்றாலும் பாலிவுட்டில் அவரது படங்கள் மிகவும் கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர், இந்திய ஹாக்கி அணி வீரரான சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டு வருகிற சூர்மா எனும் படத்தில் நடித்துவருகிறார். மணிரத்னத்தின் உதவி இயக்குநரும், ‘சாதியா’, ‘ஓகே ஜானு’ முதலான படங்களை இயக்கியவருமான ஷாத் அலி இந்தப் படத்தை இயக்குகிறார்.

மந்தீப் சிங் பாத்திரத்தில் ஜித் தோஸாஞ்ச் நடிக்க, ஹர்ப்ரீத் (ப்ரீத்) எனும் கேரக்டரில் நடிக்கிறார் தப்ஸி. இதற்காக மந்தீப் சிங்கிடம் விளையாட்டுப் பயிற்சியும் மேற்கொண்டுவருகிறார்.

ஜூலை 13ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், இந்திய அணியின் சீருடையோடு தப்ஸி தோன்றும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. தப்ஸி, இந்தப் படம் தவிர்த்து தட்கா, முல்க், மன்மர்ஸியான் போன்ற படங்களிலும் பிஸியாக இருக்கிறார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon