மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

புத்துணர்ச்சி முகாம் ஆரம்பிச்சிருச்சாமே: அப்டேட் குமாரு

புத்துணர்ச்சி முகாம் ஆரம்பிச்சிருச்சாமே: அப்டேட் குமாரு

பார்த்தீங்களா நம்ம ஊரு மாதிரி அந்த ஊரு எம்.எல்.ஏக்களும் ஜாலியா டூர் கிளம்பிட்டாங்க. நீச்சல் குளம், டான்ஸ், பார்ட்டின்னு இனி ஒரே கும்மாளம் தான். மீடியாகாரங்களும் ஹெலி கேம்லாம் வச்சு படம் பிடிச்சு காட்டுவாங்க. நம்மளை இவ்வளவு நாள் பிடிச்சு ஆட்டுன பிரேக்கிங் நியூஸ் காய்ச்சல் இப்ப கர்நாடகாவுக்கு சிஃப்ட் ஆகிடுச்சு. நம்மளும் ரெண்டு வருசமா அந்த கொதிநிலையிலேயே இருந்துட்டு இப்ப தான்... சாரி இப்பவும் மாறலை. அதுக்கே பழகிட்டோம். கன்னடக்காரங்களும் பழகிருவாங்க. இந்தியா முழுக்க ரவுண்டு கட்டி அடிச்ச மோடி அண்ட் கோ- வை கர்நாடகாவுல இப்படி நிப்பாட்டினது என்னமோ எதிர்பார்க்காத ட்விஸ்ட் தான். 104 சீட் வாங்கி ஆட்சியில உட்கார முடியாம நிற்குறது எவ்வளவு வேதனையா இருக்கு. அது மாதிரி தான் 1176 மார்க்கு வாங்கி டாக்டராக முடியாம போன அனிதாவுக்கும் இருக்கும்னு மீம்ஸ் ஒண்ண ஷேர் பண்ணேன். அதுக்கு எதுக்கு குமாரு அனிதாவை அவங்களோட கம்ப்பேர் பண்ணுறன்னு அண்ணன் ஒருத்தர் உரிமையா திட்டிட்டு போறாரு. அப்டேட்டை பாருங்க. வேற என்ன கமெண்ட் வந்துருக்குன்னு பார்த்துட்டு வாரேன்.

@Kadharb32402180

பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிய நான் ஒன்றும் எடப்பாடி பழனிச்சாமி இல்லை - குமாரசாமி

ஆந்திரா,கர்நாடகா,கேரளா னு நம்ம மானம் கப்பல் ஏறிக்கிட்டே இருக்கே...

@Kozhiyaar

ஒரு படம் நல்லா ஓட அந்த படம் நல்லா இருக்கணும்னு அவசியம் இல்லை, அது கூட வர மற்ற படங்கள் கேவலமா இருந்தாலே போதும்!!

அது போலத்தான் கர்நாடகாவில் 'பாஜக'வின் வெற்றியும்!!

@senthilcp

நம்ம முன்னோர்கள் சொன்னதுலயே ஏத்துக்கவே முடியாத பழமொழி − பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது,

வாராவாரம் புதன் கிடைக்குது,மாமாங்கம் ஆனாலும் பொண்ணு கிடைக்க மாட்டேங்குது பல மாப்ளைகளுக்கு

@RK_twitz7274

கர்நாடகாவின் அடுத்த முதல்வர்: குமாரசாமியா?.. எடியூரப்பாவா?.. ஆளுநர் யாரை அழைப்பார்?

//அழைப்பார் அழைக்க சொன்னால் அழைப்பார் ஆளுநர்!!

@lazydevilgirl

ஏன்டா... நீ தா பரிட்சைல பாஸ் ஆயிட்டல அத்தோட போக வேண்டியதுதானே..

அத விட்டுட்டு நீங்க +2 ல எவ்வளவு மார்க் எடுத்திங்கனு கேட்டு ஒரு பெரிய மனுஷன அவமான படுத்துற ..

@lazydevilgirl

காங்கிரஸ் தேவகௌடாகிட்ட பேசிட்டு இருப்பாங்க.

ஆனா பாஜக தேவகௌடா கட்சி எம்.எல்.ஏக்கள் கிட்ட பேசிட்டு இருப்பாங்க

@VANANM41

வைகாசி மாதம் மொய் கவருக்கும் மொய்க்கும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கிறது..

எத்தனை கல்யாண அழைப்பிதழ்

@Thaadikkaran

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை சந்திக்க தயாரா பா.ஜனதாவிற்கு சிவசேனா சவால்

உன்கிட்ட கேட்டாங்களா, சும்மாவே இருக்க மாட்டீங்களா..!

@Thaadikkaran

உலகின் தலைசிறந்த சொல் கீழ்கண்டவாறு அழைக்கப்படும்.

1.சோறு.

2.நாளைக்கு லீவு.

3.சேலெரி கிரேடிடெட்..!

@Thaadikkaran

என்னை பற்றி என்ன நினைக்குறீங்க!? எனும் கேள்விக்கு மட்டும் எல்லோராலும் எளிதில் கூச்ச மில்லாமல் பொய் சொல்ல முடிகிறது.,!

@senthilcp

மாமா,உங்க பையன் பலருக்கும் வழிகாட்டியா இருக்கார்னீங்க,?ஆனா அவர் ஆபீசுக்கே போகாம எப்போ பாரு டீக்கடைலயே உக்காந்திருக்காரு?

அதாம்மா, வெளியூர் , உள்ளூர் ஆளுங்க எதுனா அட்ரஸ் கேட்டா வழி காட்டுவாரு, டீ யோ பன்னோ குடுக்கறதை வாங்கிக்குவாரு

@Sandy_Offfl

கோயில்கள்ல இந்த வாசகம் போடும் நாள் வெகு தொலைவில் இல்லை...

கடவுள் சிலையுடன் ஃசெல்ஃபி - ₹500

@gips_twitz

முன்ன மிடில்கிளாஸ் குடும்பங்கள் தான் அதிகம் கடன் வாங்குவாங்க

ஆனா இப்ப மிடில்கிளாஸ் ன்னு காட்டிக்கிறதுக்கே கடன் வாங்குறாங்க ...!

@Kozhiyaar

எந்தவொரு உறவிலும் பிரிவின் வலி தீர்வதற்குள் பேசி விடுங்கள்!!

வலி பழகி போச்சுன்னா பிரிவு நிரந்தரம் ஆயிடும்!!!

@CreativeTwitz

அனுசரிக்க வேண்டியவற்றை புறக்கணித்து, புறக்கணிக்க வேண்டியவற்றை அனுசரிப்பதாலே பல பிரச்னைகள் வந்துடுது.

@ajay_aswa

அடகுக்கு எடுத்து பணம் மட்டும் கொடுக்கலைன்னா ஏழைகளிடம் நகை சேமிப்புன்னு ஒன்று இல்லாமலையே போய்ருக்கும்

@Ktnisha294

ஆட்சி அமைக்க பாஜக எது வேண்டுமானாலும் செய்யும் - #ஸ்டாலின்..

என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க ஆனா #நல்லது மட்டும் பண்ணவே மாட்டாங்க.

@ShivaP_Offl

20ஓவர் கிரிக்கெட் மேட்ச்லகூட “டக்ஸ்ஒர்த் லூயிஸ்” விதியை பயன்படுத்தி உடனே தீர்ப்ப சொல்றீங்க

எலக்‌ஷன் ரிசல்ட் டிபிகல்ட்டா வந்ததும், இதே மெத்தேட பயன்படுத்தி உடனே ஒரு நல்ல தீர்ப்ப சொல்லக்கூடாதா

@Kozhiyaar

அமிதாப் பச்சனையும் அவர் அம்மா 'பையன் வளரவே மாட்டேங்கிறான்' என்று தான் சொல்லி இருப்பார் போலும்!!!

-லாக் ஆஃப்

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon