மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

அதிக பில்லியனர்களை உருவாக்கும் இந்தியா!

அதிக பில்லியனர்களை உருவாக்கும் இந்தியா!

இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் புதிதாக 238 பில்லியனர்கள் உருவாவார்கள் என்று சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது.

மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ஆப்ரி-ஆசியா பேங்க், சர்வதேச அளவிலான சொத்து மதிப்பு சார்ந்த ஆய்வறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில், 1 பில்லியன் டாலருக்கும் மேலான சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் 2027ஆம் ஆண்டில் மொத்தம் 357 பில்லியனர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 119 பில்லியனர்கள் இருக்கிறார்கள். எனில் 10 ஆண்டுகளில் இந்தியாவின் பில்லியனர்களின் எண்ணிக்கை 200 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது.

புதிதாக உருவாகும் பில்லியனர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் 2027ஆம் ஆண்டில் மொத்தம் 697 பில்லியனர்களுடன் சீனா முதலிடத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது 249 பில்லியனர்கள் இருக்கின்றனர். அதாவது 10 ஆண்டுகளில் 448 புதிய பில்லியனர்களை உருவாக்கும் திறனை சீனா கொண்டுள்ளது. இந்தியாவில் புதிதாக உருவாகும் பில்லியனர்களின் எண்ணிக்கை 238. 2027ஆம் ஆண்டில் சீனா, இந்தியாவைத் தொடர்ந்து 884 பில்லியனர்களுடன் அமெரிக்காவும், 142 பில்லியனர்களுடன் ரஷ்யாவும், 61 பில்லியனர்களுடன் ஆஸ்திரேலியாவும், 78 பில்லியனர்களுடன் ஹாங்காங்கும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon