மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ரம்ஜான்: ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்!

ரம்ஜான்: ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்!

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ரம்ஜான் மாதம் இன்று (மே 16) தொடங்கி, வரும் ஜூன் 14 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இஸ்லாமியர்கள் வன்முறை, தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள்; இஸ்லாமியர்களின் புனித மாதமாகக் கருதப்படும் இந்த நாட்களில் தேவையின்றி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, காஷ்மீரில் அமைதி ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து உள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”ரம்ஜான் மாதத்தில், பாதுகாப்புப் படையினர் எந்த வித ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம். ஆனால் ஊடுருவித் தாக்குதல், அத்து மீறி எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு பதிலடி கொடுக்கவும், அப்பாவி மக்களின் உயிரைக் காக்கவும் பாதுகாப்புப் படையினருக்கு முழு உரிமை உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முஸ்லிம் சகோதர சகோதரிகள் ரம்ஜானை சமாதானமாகவும் எந்தவொரு கஷ்டமும் இன்றிக் கொண்டாட, இந்த முயற்சியில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon