மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

‘அஸ்தி’ புரொமோஷனில் தனுஷ்

‘அஸ்தி’ புரொமோஷனில் தனுஷ்

கான் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகர் தனுஷ் அஸ்தி குறும்படத்தின் போஸ்டரை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்.

இந்திய மொழிப் படங்களில் நடித்திருக்கும் தனுஷ், அடுத்ததாக ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ பிரான்ஸில் நடைபெற்றுவரும் 71ஆவது கான் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களில் பங்கெடுத்துள்ளது. இதற்காக தனுஷும் அங்கு சென்றிருக்கிறார்.

அந்தப் படத்தை தமிழில் ‘வாழ்க்கையை தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் வெளியிட முயற்சித்து வருகிறார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அங்கேயே வெளியிட்டுள்ளார். நேற்று (மே 15) நடந்த ரெட் கார்பெட் நிகழ்வில் தனுஷ் தனது படக்குழுவினருடன் அணிவகுத்தார்.

இதனையடுத்து கான் விழாவில் தனுஷ் அஸ்தி என்ற குறும்படத்தின் போஸ்டரை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார். தின்கர் ராவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அந்தாராவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அம்மா, மகளுக்கு இடையே உள்ள உறவு பற்றிய 14 நிமிட குறும்படமாக அஸ்தி உருவாகியிருக்கிறது. தனது அம்மாவின் அஸ்தியைக் கங்கையில் கரைக்க எடுத்துச் செல்லும் மகள், அதைக் கரைக்க மனம் வராமல் தன்னுடன் எடுத்துக்கொண்டு பயணிக்கும் கதையாக இது உருவாகி உள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon