மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

புதிய இந்தியாவுக்கு விவாதக் கூட்டம்!

புதிய இந்தியாவுக்கு விவாதக் கூட்டம்!

'புதிய இந்தியா- 2022' திட்டம் குறித்து விவாதிக்க அடுத்த மாதத்தில் கூட்டம் ஒன்றை நடத்த நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் அதிகரிக்கும் வகையில் புதிய இந்தியா-2022 என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் இந்தப் புதியத் திட்டத்துக்கான மூலோபாயக் கொள்கைகளை வகுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதத்தில் இந்தத் திட்டம் குறித்து விவாதிக்கக் கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக நிதி ஆயோக் கூறியுள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'புதிய இந்தியா-2022 திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த அரசுக் குழுவின் நான்காவது கூட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு நிதி ஆயோக் அமைப்பின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார். ஒன்றிய அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்' என்று கூறப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, ஜாதிப் பாகுபாடுகளைக் களைதல் ஆகிய பணிகளை 2022ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றுவதே இந்தப் புதிய இந்தியா திட்டத்தின் மைய நோக்கமாகும். 2022ஆம் ஆண்டில் இந்தியா தனது 75ஆவது சுதந்திர நாளைக் கொண்டாடவிருப்பதால் அதற்கு முன்பாக இந்தச் சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon