மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

மலேசியா மணல்: அவகாசம் கோரும் அரசு!

மலேசியா மணல்: அவகாசம் கோரும் அரசு!

மலேசியாவிliருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் கட்டுமானத்துக்கு உதவாது என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில் இன்று (மே 16) மணலை ஆய்வு செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கோரியுள்ளது தமிழக அரசு.

மலேசியாவில் இருந்து தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அனுமதி வழங்காத நிலையில் ராமையா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இறக்குமதி மணலை அரசு வாங்குமா வாங்காதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, “தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணலில் 85 சதவிகித சிலிக்கான் உள்ளதால் அது கட்டுமானத்துக்கு உதவாது; அதை வாங்கி நாங்கள் என்ன செய்வது” என்று கூறியிருந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், மணல் கட்டுமானத்திற்கு உகந்ததா என ஆய்வு செய்து வரும் 16ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இன்று (மே 16) இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் இறக்குமதி மணலை ஆய்வு செய்ய மேலும் தங்களுக்கு 2 வார காலம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மணல் தரமாக இருக்கும் பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது. இதையடுத்து வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon