மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

அமர்நாத் யாத்திரை: 1.7 லட்சம் பேர் பதிவு!

அமர்நாத் யாத்திரை: 1.7 லட்சம் பேர் பதிவு!

2018ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை செல்ல 1.7 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத்ஜி புனித வாரியம் தெரிவித்துள்ளது.

அமர்நாத் யாத்திரை என்பது ,இந்துக்களின் கடவுளான சிவபெருமானின் பக்தர்கள் மேற்கொள்ளும் ஒரு ஆன்மீகப் பயணமாகும். அதன்படி இந்த ஆண்டு வரும் ஜூன் மாதம் 28ஆம் தேதி அமர்நாத் பயணம் தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது. யாத்திரைக்கான பதிவு மார்ச் 1ஆம் தேதியன்று தொடங்கியது.

இதற்கு சுமார் 1.69 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 2,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர். 28,516 பேர் ஹெலிகாப்டர் மூலம் யாத்திரைக்குச் சென்றுவர பதிவு செய்துள்ளனர். 13 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்ய அனுமதியில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பாக யாத்திரை சென்றுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 1364 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு 2.20 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர். 2017ஆம் ஆண்டு 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது தீவிரவாதத் தாக்குதல் மற்றும் பேருந்து விபத்துகளில் சிக்கி 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon