மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

இந்திய புத்த பிக்குகளுக்குச் சீனாவில் தடை!

இந்திய புத்த பிக்குகளுக்குச் சீனாவில் தடை!

இந்தியாவிலிருந்து சீனா செல்லும் புத்த பிக்குகளுக்கு அந்நாடு தடை விதித்துள்ளது என குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள ஐந்து மதங்களில் ஒன்றுதான் புத்த மதம். இந்தியாவின் புத்த பிக்குகள் சீனத்துக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்குப் புத்த போதனைகளைக் கற்றுத்தருவது நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், தற்போது திடீரென்று இந்தியாவிலிருந்து வரும் புத்த குருமார்கள் தவறான முறையில் பயிற்சி பெற்று வருவதால் அவர்கள் இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிச்சூவான் நகரில் இது போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசின் அதிகாரபூர்வ செய்தி நாளேடான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிச்சூவான் நகர அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியாவிலிருந்து வரும் புத்த பிக்குகள் பிரிவினை வாதக் கண்ணோட்டத்துடன் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எங்களது மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும்போது அதே பிரிவினைக் கண்ணோட்டத்தை மாணவர்களிடம் விதைத்து விடுவார்கள் என்பதால் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் அரசியல் அடைக்கலம் புகுந்து இங்கு வசித்துவரும் திபெத்திய மதத்தலைவர் தலாய்லாமா இந்தியாவிலிருந்து கொண்டே பிரிவினை நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகிறார்” என்று சீன அரசு பல ஆண்டுகளாகக் குற்றம்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon