மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

தள்ளிப்போன அதர்வா படம்!

தள்ளிப்போன  அதர்வா படம்!

செம போதை ஆகாத திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போயுள்ளது.

அதர்வாவுக்கு ஜோடியாக அனைக்கா, சக்ர போதி ஆகியோர் நடித்துள்ள `செம போத ஆகாத’ படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் கடந்த ஆண்டே வெளியாகி கவனம் பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆறு மாதங்கள் கழித்து தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு படம் வரும் மே 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதர்வா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிக் அஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம் தற்போது மே 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதர்வா வெளியிட்ட அறிக்கையில், “ரசிகர்கள் பொழுதுபோக்கும் வகையில் எங்களது முழுத் திறமையையும் வெளிக்காட்டும் விதமாக படங்களை உருவாக்குகிறோம். ஒவ்வொரு படத்திற்கும் கடின உழைப்பு, ஆர்வம், அன்பு கலந்தே படைக்கிறோம். பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொரு படத்திற்கும் சரியான இடம் தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். கிக் அஸ் எம்டர்டெய்ன்மென்ட் சார்பாக ‘செம போதை ஆகாத’ படத்தை மே 18ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். அது மே 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி உள்ளிட்ட இந்த வாரம் வெளியாகும் படங்கள் வெற்றி பெற எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அனைத்து ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் ஆதரவு தர வேண்டுகிறோம்” எனக் கூறியுள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon