மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 மா 2020

மத்தியப் பிரதேசம்: பள்ளி வருகைப்பதிவில் ஜெய்ஹிந்த்!

மத்தியப் பிரதேசம்: பள்ளி வருகைப்பதிவில் ஜெய்ஹிந்த்!

மத்திய பிரதேசப் பள்ளிகளில் வகுப்பு ஆசிரியர் வருகைப்பதிவிற்காக அழைக்கும்போது மாணவர்கள் எஸ் சாருக்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்றுதான் கூறவேண்டும் என்பது கட்டாய விதியாக்கப்பட்டதாக பள்ளி கல்வி அமைச்சர் விஜய் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று போபாலில் அமைச்சர் விஜய் ஷா பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறுகையில் ,பள்ளி மாணவர்களிடம் தேச பக்தி உணர்வை ஊட்டுவதற்காக ஜெய் ஹிந்து என்று கூறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருகைப்பதிவை மேற்கொள்ளும்போது ஆசிரியர்கள் மாணவர்களை பெயர் சொல்லி அழைப்பார்கள். அப்போது ஆசிரியருக்கு பதிலளிக்கும் விதமாக எஸ் சார் என்று ஒவ்வொரு மாணவனும் மாணவியும் கூற வேண்டும். இது காலனியக்காலத்து முறையாகும். எனவே எஸ் சாருக்கு பதிலாக ஜெய் ஹிந்த் என்று கூறவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் தேச பக்தி வளர்வதற்கு உதவும்.

அரசின் உத்தரவை மாநிலத்திலுள்ள 1.22 லட்சம் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon