மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

தமிழக கட்சிகளை தடை செய்ய சதி: வைகோ

தமிழக கட்சிகளை தடை செய்ய சதி: வைகோ

தமிழர் உரிமைக்காக, ஜனநாயக உரிமைக்காகப் போராடும் அமைப்புகளைத் தடை செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

நீட் , கதிராமங்கலம்,ஸ்டெர்லைட் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (மே16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன், வைகோ, முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “தமிழர் உரிமைக்காக, தமிழீழ உரிமைக்காக, ஜனநாயக உரிமைக்காகப் போராடும் அமைப்புகளை மத்திய அரசு உளவுத்துறையின் மூலம் தடை செய்யலாமா என்று திட்டமிட்டு கொண்டிருக்கிறது.

அடால்ஃப் ஹிட்லர் இதைத் தான் செய்தார். ஹிட்லர் ,முசோலினி அளவிற்கு இவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் அல்ல. இவர்கள் தூசு. எனவே பாசிச நடவடிக்கை எடுத்து கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று நினைத்தால் வேரோடு அழிந்து போகும் உங்களது முயற்சிகளும், அமைப்புகளும்” என்று எச்சரித்தார்.

“தமிழகத்தில் எந்த அமைப்பாக இருந்தாலும் , எத்தகைய கருத்துடையவர்களாக இருந்தாலும் . அவர்களை ஒடுக்குவது , சிறையில் அடைப்பது போன்ற பாசிச நடவடிக்கைகளில் ஈடுபட நினைக்கும் மத்திய அரசின் முயற்சிகள் அழிந்து போகும்” என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளை தடை செய்யவும் ஜனநாயக உரிமைகளை அடியோடு நிர்மூலமாக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு உளவுத்துறையின் மூலம் ஈடுபடப் போவதாக தகவல் வந்திருக்கிறது. எனவே மத்திய அரசின் இத்தகைய செயலை கண்டிக்கிறோம்.

குட்கா ஊழலில் தொடர்புடையவர்களான டிஜிபி மற்றும் அமைச்சர் சுகாதார துறை அமைச்சரைப் பாதுகாக்க கூடிய முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டு வருவதையும் வண்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறினார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon