மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 20 நவ 2019

சண்டைக் காட்சிகளில் மிரட்டும் டாம் க்ரூஸ்

சண்டைக் காட்சிகளில் மிரட்டும் டாம் க்ரூஸ்

டாம் க்ரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாஸிபிள்-ஃபால்அவுட் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் மட்டுமில்லாது உலகெங்கிலும் தனக்கான ரசிகர்களைப் பரப்பிவைத்திருப்பவர் நடிகர் டாம் க்ரூஸ். அவரது நடிப்பில் தற்போது மிஷன் இம்பாஸிபிள்-ஃபால்அவுட் எனும் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. மிஷன் இம்பாஸிபிள் சீரீஸில் இதுவரை 5 படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 6ஆவது பாகமாக இந்தப் படமானது உருவாகிவருகிறது.

இதற்கு முந்தைய பாகமான ‘மிஷன் இம்பாஸிபிள் – ரோக் நேஷன்’ படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவெரி இதை இயக்கிவருகிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட முந்தைய பாகங்களைப் போன்றே இதிலும் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இந்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி 'SUPER BOWL LII’ எனும் கால்பந்தாட்டத்தின்போது வெளியாகியிருந்த இப்படத்தின் முதல் ட்ரெய்லரும், படத்தின் சண்டைக் ட்சி மேக்கிங் வீடியோவும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 27ஆம் தேதி இந்தப் டம் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் டத்தின் இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon