மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மே 2018

வருகிறது பெண்கள் ஐபிஎல்!

வருகிறது பெண்கள் ஐபிஎல்!

கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது, இருப்பினும் ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு உள்ள வரவேற்பு பெண்கள் போட்டிகளுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்றும் நோக்கில் பெண்களுக்கு என்று ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

இதற்கு முன்னோட்டமாக மே 22ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் முதலாவது தகுதிச் சுற்றுக்கு முன் ஒரே ஒரு பெண்கள் டி20 போட்டியை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஐ.பிஎல் தொடருக்கு கிடைக்கும் வரவேற்பைக் காண இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் டி 20 போட்டிகளுக்கான கேப்டனான ஹரமன்ப்ரீத் காவூர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிர்த்தி மந்தனா, இரு அணிகளின் கேப்டன்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த அணிகளில் இந்திய வீரர்களைத் தவிர நியூசிலாந்து அணியின் கேப்டன் சுஜி பேட்ஸ் (Suzie Bates), அதே அணியைச் சேர்ந்த சொப்யே டிவின் (Sophie Devine), இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் வாட் (Danielle Wyatt), மேலும் அதே அணியைச் சேர்ந்த டேனியல் ஹஜீலி (Danielle Hazell), ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எல்லிசே பெர்ரி (Ellyse Perry) போன்ற முன்னணி சர்வதேச வீராங்கனைகளும் பங்கேற்பார்கள் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

“கடந்த இரண்டு வாரங்களாக ஐபிஎல் போல் பெண்களுக்கு என்று ஐபிஎல் போட்டிகளை உருவாக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்று ஐபிஎல் போட்டிகளின் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

“பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கும், வளர்ப்பதற்கும் பிசிசிஐ அனைத்துத் தடைகளையும் மீறி இந்தப் போட்டியை நடத்தவுள்ளது, இது வருங்கால நட்சத்திர வீராங்கனைகளை உருவாக்கும் லீக்கின் ஒரு சிறிய, குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். ஐபிஎல் போட்டிகள் மிகவும் பிரபலமான ஒரு தொடர், ஐபிஎல் போன்று பெண்களின் லீக் உருவாக்கம் நீண்ட கால முயற்சியாகும், மிதாலி ராஜ் (Mithali Raj), ஜூலன் கோசுவாமி (Jhulan Goswami), ஹரமன்ப்ரீத் கௌர் (Harmanpreet Kaur), ஸ்மிர்த்தி மந்தனா (Smriti Mandhana), வேதா கிருஷ்ணமூர்த்தி (Veda Krishanmurthy) போன்ற இந்திய வீராங்கனைகள், வெளிநாட்டு வீராங்கனைகளுடன் விளையாடுவது அவர்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும்” என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் டயானா இடுல்ஜி (Diana Edulji) கூறியுள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

புதன் 16 மே 2018