மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

இலவச வங்கிச் சேவைக்கும் ஜிஎஸ்டியா?

இலவச வங்கிச் சேவைக்கும் ஜிஎஸ்டியா?

செக் புக் (காசோலைப் புத்தகம்) வழங்கல், ஏடிஎம்களில் பணம் விநியோகம் போன்ற இலவச வங்கிச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சில இலவசச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கலாமா என்பது குறித்த குழப்பங்களைத் தெளிவுபடுத்துமாறு நிதிச் சேவைகள் துறை வருவாய் துறையை அணுகி விளக்கம் கேட்டிருந்தது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இலவச வங்கிச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று நிதிச் சேவைகள் துறையிடம் வருவாய் துறை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.

இலவசச் சேவைகளுக்கு வங்கிகள் வசூலிக்கும் வரி செலுத்தப்படுவதில்லை என்று வங்கிகளுக்குச் சேவை வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இத்தகைய சேவைகளுக்கு வரி விதிக்கப்படலாமா என்பது குறித்து விளக்கம் கேட்டு வருவாய் துறையை நிதி சேவைகள் துறை அணுகியுள்ளது. செக் புக் வழங்கல், கணக்கு அறிக்கை, ஏடிஎம் சேவை போன்றவை ஒரு வரம்பு வரையில் இலவசம் என்றும், அவை வர்த்தகச் செயல்பாடுகள் இல்லை என்றும், இச்சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கத் தேவையில்லை என்றும் நிதிச் சேவைகள் துறை கருதுகின்றது.

வங்கிகளின் சார்பில் இந்திய வங்கிகள் சங்கமும் வரித் துறை அதிகாரிகளை அணுகியுள்ளது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விகிதாச்சாரத்திலான குறைந்தபட்ச தொகையை (minimum balance) நிர்ணயித்துள்ளன. இத்தொகைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு சில இலவசச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon