மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

பன்னீர் கருத்து: சிதம்பரம் கேள்வி!

பன்னீர் கருத்து: சிதம்பரம் கேள்வி!

பாஜக வெற்றி குறித்த பன்னீர்செல்வம் கருத்தை விமர்சனம் செய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “ஈபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தவிர்த்து 222 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியானது. யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக 104 இடங்களையும் காங்கிரஸ் 78 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்றுள்ளது.

யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இது குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று (மே 15) தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றியானது தென்னிந்தியாவில் பிரம்மாண்ட நுழைவு என்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

துணை முதல்வர் சொன்ன கருத்தானது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று (மே 16) முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்? இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தனது மூன்றாவது பதிவில், ஈபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டுத் தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon