மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

நான் யானை அல்ல, குதிரை: ரஜினி விடுத்த சவால்!

நான் யானை அல்ல, குதிரை: ரஜினி விடுத்த சவால்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 73

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் கதையில் நடிகர்கள் பயணம் செய்திருக்கும் படங்கள் வெற்றி அடைந்திருக்கிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திற்குப் பின் கதையின் பின்னால் போனது தமிழ் சினிமா. கமல், ரஜினி, இருவரும் வியாபாரத்தில் உச்சத்தைத் தொட்டபோது கதை காணாமல்போய் கதாநாயக பிம்பம் முன்னிறுத்தப்பட்டது.

பல நேரங்களில் இம்மாதிரியான போக்கு முறியடிக்கப்பட்டுக் கதைக்குள் தமிழ் சினிமாவைக் கொண்டுவர இயக்குநர்கள் முயற்சித்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள் இம்முயற்சிக்கு உதவியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் சந்திரமுகி. கன்னடம், மலையாளத்தில் வெற்றி வாகை சூடிய இப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு ஆகியோர் நடிக்க, இசை வித்யாசாகர்.

சிவாஜி குடும்பத்தின் மீது ரஜினிக்கு இருக்கும் மரியாதை காரணமாகப் பிற நிறுவனங்களில் வாங்குவதுபோல் இங்கு முதலில் சம்பளம் வாங்குவதைத் தவிர்த்தார் எனக் கூறப்பட்டது. இதனால் படப்பிடிப்புக்கான முதலீடு மட்டுமே தேவைப்பட்டது தயாரிப்பு தரப்புக்கு. ஏற்கனவே வெற்றி பெற்ற படம் என்பதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்ததால் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நியாயமான விலைக்கு சந்திரமுகி விற்பனை செய்யப்பட்டது.

இப்படத்தின் வெற்றி ரஜினி, சிவாஜி புரொடக்‌ஷன் இருவருக்கும் முக்கியம். சந்திரமுகி ஏப்ரல் 14 ரிலீஸ் என திட்டமிடப்பட்டிருந்த நாளில் விஜய், வடிவேலு நடித்த சச்சின் படமும் கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ரிலீஸ் எனத் தகவல்கள் வந்தன.

சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த ராம்குமார், ஏற்கனவே நாங்கள் சிரமத்தில் இருக்கிறோம்; ஒரு வாரம் தள்ளி வாருங்கள் என சச்சின் படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டுப் பார்த்தார். தமிழ்ப் புத்தாண்டுக்கு வருவதில் சச்சின் படம் மட்டுமே வெற்றி பெறும். நீங்கள் வேண்டுமானால் தள்ளிப் போங்கள் என்று தாணு பதில் கூறியுள்ளார்.

மும்பை எக்ஸ்பிரஸ் தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டது. பரீட்சார்த்த முயற்சியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் மும்பை எக்ஸ்பிரஸ். இந்தப் படத்தைப் பார்த்து சந்திரமுகி தயாரிப்பு தரப்பு பயப்படவில்லை. விஜய் படத்தைப் பார்த்து பயந்தனர். காரணம், ஜனவரியில் விஜய் நடித்து வெளியான திருப்பாச்சி வசூலில் சாதனை நிகழ்த்தியிருந்தது.

இதற்கிடையில் சந்திரமுகி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், “பாபா ஓடல, வாஸ்தவம்தான், அதுக்காக ரஜினிகாந்த் அவ்வளவுதான். கணக்கு முடிஞ்சிடுச்சு என்கிறார்கள். நான் யானை இல்லை. விழுந்தா எந்திரிக்க பிறர் உதவி தேவைப்படும். நான் குதிரை. விழுந்தா டக்குன்னு எந்திரிச்சுடும். அதுதான் ரஜினிகாந்த்” என அரசியல் சூட்டைக் கிளப்பிவிட்டு, இப்படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திக்கிறேன் என்றார்.

மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் படங்களுடன் அதிக தியேட்டர்களில் வெளியான சந்திரமுகி முதல் நாள் வசூல் மந்தமாகவே இருந்தது. எதிர்மறையான விமர்சனங்கள் அனைத்தையும் சமாளித்து மூன்றாவது நாள் ஜெட் வேகத்தில் கல்லா கட்டத் தொடங்கியது. தள்ளிப்போக முடியாது எனக் களமிறங்கிய சச்சின் படம் தடுமாறியது. மும்பை எக்ஸ்பிரஸ் முதல் நாளே திரையரங்குகளில் மூடு விழா கண்டது.

சந்திரமுகி படம் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் பல்வேறு நம்பிக்கைகளை, அனுபவங்களைக் கற்றுக் கொடுத்தது. அவை என்ன? நாளை பகல் 1 மணிக்கு.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68 பகுதி 69 பகுதி 70 பகுதி 71 பகுதி 72

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon