மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 17 செப் 2019

கர்நாடக தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

கர்நாடக தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நேற்று(மே 15 ) மாலை செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போதி பாஜக முன்னிலையில் இருப்பதாக வந்த தகவலை வைத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவிற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால் வாழ்த்து தெரிவித்த சிறிது நேரத்திலே தேர்தல் நிலவரம் தலைகீழாக மாறியது. அதிக தொகுதிகளை பாஜக வென்றிருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை பெறவில்லை. இதற்கிடையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்ட ணி வைத்துக் கொண்டது. மஜத கட்சியின் குமாரசாமியை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று (மே 15) மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய ஆட்சி அமையுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, " கர்நாடக ஆளுநர் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஜனநாயக முறைப்படி அவர் அழைக்கப் படவேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.''

கர்நாடகாவில் ஆட்சியை அமைக்க பாஜக பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறதே ? என்ற கேள்விக்கு ,

''அவர்கள் சூழ்ச்சிகளில் ஈடுபடத்தான் செய்வார்கள் . காரணம், மதவாத அடிப்படையில் கட்சி நடத்துபவர்கள். இப்படிப்பட்ட மதவாதக் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டுமென்றால், மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்று சேரவேண்டும் என்பதற்கு, கர்நாடக தேர்தல் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. எனவே, மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரக்கூடிய காலகட்டத்தில், அதைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon