மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

இ-பில்: மேலும் இரு மாநிலங்களில் அமல்!

இ-பில்: மேலும் இரு மாநிலங்களில் அமல்!

இந்த வாரம் முதல் அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறை அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறை அசாம் மாநிலத்தில் மே 16ஆம் தேதி முதலும், ராஜஸ்தான் மாநிலத்தில் மே 20ஆம் தேதி முதலும் அமல்படுத்தப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மே 16, 2018 முதல் அசாம் மாநிலத்திலும், மே 20, 2018 முதல் ராஜஸ்தானிலும் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறை அமல்படுத்தப்படும். இந்த மாநிலங்களில் ஆன்லைன் பில் முறை அமல்படுத்தப்படுவதன் மூலம் வர்த்தகத்திற்கும், தொழில்துறைக்கும் வசதிகள் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறையை அறிமுகப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் முன்மொழிந்தது. ஆன்லைன் பில் முறை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. மே 13ஆம் தேதி வரையில் ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் / ஒன்றியப் பிரதேசங்களில், மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon