மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 28 நவ 2020

பள்ளி வாகனங்களுக்குத் தகுதிச்சான்று கட்டாயம்!

பள்ளி வாகனங்களுக்குத் தகுதிச்சான்று கட்டாயம்!

இம்மாத இறுதிக்குள் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறவேண்டும். இல்லையெனில் அந்தப் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வாகனங்களும் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆண்டுதோறும் ஆய்வு செய்து, அதற்கான தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும். சென்னை கொளத்தூரில் நேற்று (மே 15) நடைபெற்ற இந்த ஆண்டிற்கான ஆய்வில் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆய்வின் போது பேருந்தில் உள்ள அவசரக்கால வழி, மருத்துவ முதலுதவிப் பெட்டிகள், தீயணைப்புக் கருவிகள் போன்றவை உள்ளனவா என்பது பரிசோதிக்கப்பட்டன. மேலும், அரசு விதிமுறைகளின் படி பள்ளி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறதா என்பது பற்றியும் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பள்ளி வாகனங்களை இயக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அப்போது பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், "பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் வருகிற 31ஆம் தேதிக்குள் தகுதிச்சான்று பெறவேண்டும். இல்லையெனில் அந்தப் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசு நிர்ணயித்த விதிமுறைகளின்படி தான் வாகனங்களை இயக்க வேண்டும்" என்று கூறினார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon