மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

புரொமோஷனில் புதுமை காட்டும் ‘காளி’

புரொமோஷனில் புதுமை காட்டும் ‘காளி’

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ’காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ’காளி’. அம்ரிதா, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி என நான்கு நாயகிகள் நடித்துள்ளனர். ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். நாயகனாக மட்டுமில்லாமல் இப்படத்திற்கு இசையமைத்து, தானே தாயாரித்தும் வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த மாதம் 18ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

தமிழ் சினிமாவில் பலரும் விதம்விதமாக தங்களது படங்களை ப்ரோமோட் செய்து வருகிற நிலையில் காளி படக்குழுவும் அந்தக் களத்தில் குதித்துள்ளது. அதன் முயற்சியாக, படத்தின் முதல் 7 நிமிடக் காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளது. விஜய் ஆண்டனி படத்துக்கு இதுபோல செய்வது முதல்முறை இல்லை. ஏற்கனவே அவர் நடித்திருந்த ’சைத்தான்’ படத்திற்கும் இதே மாதிரிதான் சில நிமிடக் காட்சிகளை வெளியிட்டு படத்துக்கு விளம்பரம் செய்திருந்தனர். அதே விஷயத்தைதான் தற்போது காளி படத்திற்கும் செய்துள்ளனர்.

காளி படத்தைத் தொடர்ந்து கணேஷா இயக்கும், ‘திமிரு புடிச்சவன்’ மற்றும் இயக்குநர் நவீன் இயக்கும் ஒரு படமும் விஜய் ஆண்டனிக்கு கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

காளி 7 நிமிட காட்சி

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon