மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

மலேசியா: முன்னாள் பிரதமர் விடுதலை!

மலேசியா: முன்னாள் பிரதமர் விடுதலை!

மலேசியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமரான மகதீர் பின் முகமது, முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹீமை விடுதலை செய்துள்ளார் என அந்நாட்டு அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர் மகதீர் பின் முகமது பிரதமரானார். இதன் மூலம் அந்நாட்டில் 60 ஆண்டு காலம் நீடித்து வந்த நஜிப் தலைமையிலான பிஎன் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

மகதீரின் வலதுகரமாகச் செயல்பட்டவரும் முன்னாள் துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹீம் பாலியல் குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை அனுபவித்துவந்தார். அவருடைய சிறைத் தண்டனைக் காலம் வரும் ஜூன் 8 தேதியன்று முடிவடைகிறது. ஆனால் பிரதமரான மகதீர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அன்வரை முன்கூட்டியே விடுதலை செய்துள்ளார். அவரது குற்றங்களை அந்நாட்டின் மன்னர் மன்னித்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவி்த்துள்ளன.

இதற்கிடையே நேற்று (15.05.2018) பத்திகையாளர்களிடம் பேசிய மகதீர் , தான் ஓரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகள்தான் பதவியில் இருப்பேன் அதற்கு பின்னர் அன்வரைப் பிரதமராக்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரான நஜிப் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்திகள் தெரிவித்துள்ளன.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon