மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

அட்லியின் டோலிவுட் ப்ளான்!

அட்லியின் டோலிவுட் ப்ளான்!

தமிழ் சினிமாவை அடுத்து தெலுங்கு சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறார் இயக்குநர் அட்லி.

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அட்லி. ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானார். நடிகர் விஜய் நடிப்பில் தெறி மற்றும் மெர்சல் படங்களை இயக்கி தமிழின் இளம் இயக்குநர்களில் கவனிக்கக்கூடியவராக வலம் வருகிறார். தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் துவங்கியுள்ளார்.

இந்நிலையில் அட்லி நேற்று (மே15) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் . சாமி தரிசனத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அடுத்ததாகத் தமிழ் மற்றும் தெலுங்கில் படம் இயக்கவிருக்கிறேன்” என்றார்.

விஜய், அஜித் இருவரையும் இணைத்து படம் இயக்குவீர்களா என்று கேட்கப்பட்ட போது, ‘கண்டிப்பாக எடுப்பேன்’ என பதில் அளித்தார். இதனைத் தொடர்ந்து முதலில் தமிழிலும் அடுத்து தெலுங்கிலும் இயக்கவுள்ளதாகக் கூறினார்.

ஜூனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்குவது கனவு என்று முன்பு அட்லி கூறியிருந்தார். அதற்கு ஜூனியர் என்.டி.ஆரும் சம்மதம் தெரிவித்திருந்தார். தற்போது இயக்குநர் ராஜமௌலியின் படத்தில் நடிக்கவுள்ள ஜூனியர் என்.டி.ஆர், அந்தப் படம் முடிந்த பின்னர் அட்லியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon