மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

திருப்பதி: புகாரளிக்க தொலைபேசி எண்!

திருப்பதி: புகாரளிக்க தொலைபேசி எண்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தேவஸ்தானத்துக்கு புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பக்தர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க 18004254141 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 9399399399 என்ற தேவஸ்தானத்தின் வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண எஃப்.எம்.எஸ். என்ற உதவி மையமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் உரையாடுவார்கள்.

சிறிய பிரச்சினைகளை ஊழியர்களும், பெரிய பிரச்சினைகளை அதிகாரிகளும் கையாண்டு தீர்வு காண்பார்கள் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon