மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

கீரைக்கு மாறிய நெல் விவசாயிகள்!

கீரைக்கு மாறிய நெல் விவசாயிகள்!

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு சிறந்த மகசூலைப் பெறும் வகையில் கேரள நெல் விவசாயிகள் கீரை வளர்ப்புக்கு மாறியுள்ளனர்.

கேரள மாநிலம் வென்னியூர் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்குக் கீரையே தற்போது பிரதானப் பயிராக உள்ளது. இவற்றைச் சாகுபடி செய்ய மிகக் குறைந்த கால அளவே ஆகிறது என்பதோடு சந்தையில் இவற்றுக்கு அதிகத் தேவையும் இருப்பதால் கீரை உற்பத்தியில் இவர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். நெல் விவசாயத்துக்குப் பெயர் பெற்ற இந்த வென்னியூர் கிராம மக்கள் தங்களது விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை அருகிலுள்ள ஏரிகள் வாயிலாகவே பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது கோடைக் காலத்தையொட்டி ஏரிகளில் தண்ணீர் வற்றியுள்ளதால் இவர்கள் வேறு வழியின்றி மாற்றுப் பயிர் சாகுபடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சில விவசாயிகள் வாழை மற்றும் மரவள்ளிக் கிழக்கு ஆகியவற்றைப் பயிரிட்டனர். ஆனால் இதில் அவர்களால் போதிய விளைச்சலைப் பெறமுடியவில்லை; உற்பத்திச் செலவையும் ஈட்டமுடியவில்லை. எனவே கேரள மக்களின் முக்கிய உணவு வகைகளில் ஒன்றாக உள்ள கீரையைப் பயிரிட்டு அதில் லாபமடைய இவர்கள் கீரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஒருவேளை பருவநிலை மாற்றத்தால் கீரைப் பயிர்கள் சேதமடைந்தாலும் அதிலிருந்து ஒரு மாதத்துக்குள் தங்களால் மீண்டு வந்து அடுத்தகட்ட விளைச்சலில் ஈடுபட முடியும் என்று கீரை விவசாயிகள் பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon