மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

பரமேஸ்வராவுக்குத் துணை முதல்வர் பதவி!

பரமேஸ்வராவுக்குத் துணை முதல்வர் பதவி!

‘கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுக்குத் துணை முதல்வர் பதவி தரப்படும்’ என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜகவுக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து திடீர் திருப்பமாக மஜத ஆட்சியமைக்கவும் குமாரசாமி முதல்வராவதற்கும் ஆதரவளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. நேற்று மாலை ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்த குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். சந்திப்பில் குலாம் நபி ஆசாத், முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய பிஜூ நரஜூன், “காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் கர்நாடகத் தலைவர் ஜி.பரமேஸ்வராவுக்குத் துணை முதல்வர் பதவி அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மஜத ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக முல்பகல் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் நாகேஷ் ஆளுநர் வஜூபாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய ஆதரவை நாங்கள் மதிக்கிறோம். உங்களுக்காக எப்போதும் போராடுவோம். தேர்தலில் ஓய்வில்லாமல் உழைத்த கட்சியின் அனைத்துத் தலைவர்கள், தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon