மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

ஓய்வூதியம் பெறும் ஒரு கோடிப் பேர்!

ஓய்வூதியம் பெறும் ஒரு கோடிப் பேர்!

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதியோர்களுக்கான ‘அடல் பென்சன் யோஜனா’ திட்டம் 2015ஆம் ஆண்டின் மே மாதம் 9ஆம் தேதி மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் பங்களிப்பைப் பொறுத்து மாதத்துக்கு ரூ.1,000 அல்லது ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட வாழ்வாதாரம் அரசிடமிருந்து உதவியாகக் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவின் மொத்த வேலைச் சந்தையில் 85 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்ட அமைப்புசாரா துறையில் அதிகக் கவனம் செலுத்தக் குறிக்கோள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்க்கைத் துணையும் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியாகின்றனர் என்பது இத்திட்டத்தின் கூடுதல் சிறப்பு.

இத்திட்டம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைவதையொட்டி, ’அடல் பென்சன் யோஜனா ஃபார்மேஷன் டே’ என்ற பெயரில் இத்திட்டத்தின் கீழ் இணைவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் சார்பாக நடத்தப்படுகிறது. இதில் 1.60 லட்சம் வங்கிக் கிளைகளும், 20,000 தபால் நிலையங்களும் ஓய்வூதியதாரர் பதிவுக்கான சேவைகளை வழங்கும் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon