மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

தமிழகம்: கூட்டுப் பண்ணைத் தொழிலுக்கு உதவி!

தமிழகம்: கூட்டுப் பண்ணைத் தொழிலுக்கு உதவி!

தமிழக வேளாண் துறை சார்பாகத் தமிழகத்தின் சிறு விவசாயிகள் அடங்கிய ஒருங்கிணைந்த வேளாண் குழுக்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் உதவி வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்துகிறது.

ரூ.100 கோடி மதிப்பிலான கூட்டுப் பண்ணைத் தொழில் திட்டத்தைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் மூன்று பிரிவுகளின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். தலா 20 விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட விவசாய ஆர்வக் குழுக்கள், 100 விவசாயிகள் அடங்கிய ஐந்து விவசாய ஆர்வக் குழுக்களின் விவசாய உற்பத்திக் குழுக்கள் மற்றும் 10 வேளாண் உற்பத்தியாளர்கள் குழுக்கள் அடங்கிய விவசாய உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.

சென்ற ஆண்டில் இதுபோன்ற விவசாய உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2,000 விவசாய ஆர்வக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் ஒவ்வொரு குழுவுக்கும் அரசு சார்பில் விவசாய உற்பத்திக்குத் தேவையான பொருள்களை வாங்க ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இக்குழுக்கள் தங்களுக்குள் வேளாண் உபகரணங்களைப் பரிமாற்றம் செய்து பயன்படுத்திக்கொள்வதோடு இதர விவசாயிகளுக்கும் அவற்றை வாடகைக்கு விட்டுப் பயன்பெறலாம்.

சென்ற ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி நிதியில் மூன்று ஒருங்கிணைந்த அறுவடை எந்திரங்கள், 747 டிராக்டர்கள், 1,849 பவர் டிரில்லர்கள், 1,369 களை பறிக்கும் எந்திரங்கள், 783 உழும் எந்திரங்கள், 3,400 இதர வேளாண் எந்திரங்கள் வாங்கப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட 1.98 லட்சம் சிறு விவசாயிகள் பயன்பெற்றனர். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் குழுக்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்குத் தமிழக அரசு வழங்குகிறது.

இந்த ஆண்டில் விவசாயக் குழுக்களைக் கொண்ட 50 நிறுவனங்களைப் பதிவு செய்யத் தமிழக வேளாண் சந்தை மற்றும் வேளாண் தொழில் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதுவரையில் 45 வேளாண் தொழில் நிறுவனங்கள் நிறுவனப் பதிவில் தங்களைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon