மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 மே 2018

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?

அரசும் சில சமயங்களில் சாமர்த்தியமாகச் செயல்படுவதுண்டு. அந்த சாமர்த்தியம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கானதல்ல; பிரச்சினை இல்லாமல் தம் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள!

நீரையோ, நிலத்தையோ, காற்றையோ சீரழிக்கக்கூடிய திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதை வெளிப்படையாகத் தெரிவிக்கும்போது மாட்டிக்கொள்கிறோம் என்பதை அரசு இயந்திரங்கள் புரிந்துகொண்டன. போராட்டக்காரர்கள் வந்து தொல்லை கொடுக்கிறார்கள், சமூக ஊடகங்களில் பொங்குகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க ஆதிகாலத்து சாமர்த்தியத்தைத் தற்போது கையிலெடுத்திருக்கிறது அரசு.

சேலம் விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களை அபகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டபோதும், அறிவியல் ஆராய்ச்சிக்காக உயிர்ச் சூழல் நிறைந்த மலையைச் சிதைக்க முற்பட்டபோதும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என்று திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதும் போராட்டங்கள் வெடிக்கின்றன. எனவே இனி ‘திட்டங்களை’ முன்வைக்காமல் கமுக்கமாக வேலை செய்யும் சாமர்த்திய நிலைக்கு அரசு சக்கரங்கள் வந்து நிற்கின்றன.

அரசால் டெண்டர் விடப்பட்ட நிலங்களைக் கையகப்படுத்துவதற்குப் போராட்டங்கள், தடுப்பணைகள் போடுகின்றன. எனவே, அந்நிறுவனங்கள் அரசிடம், ‘வேறு நிலங்களைக் கொடுங்கள், அல்லது பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்’ என்று கேட்கின்றன. மக்களின் நன்மைக்காகப் பணத்தைத் திருப்பித் தரும் அளவுக்கான பாக்கியவான்களை நாம் பெற்றிருக்கவில்லை. எனவே வேறு நிலங்களைக் கமுக்கமாகக் கொடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

அப்படித்தான் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இருந்த ஜெம் நிறுவனத்துக்கும் வாக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்திற்காகக் கிட்டத்தட்ட 55,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேனியில் நியூட்ரினோ ஆய்வைப் போல திண்டுக்கல்லிலும் மலைகள் குடையப்படுகின்றன. வெடிச் சத்தங்கள் அடிக்கடி கேட்டபடி இருக்கின்றன என மக்கள் புகார் அளிக்கின்றனர். ஆனால், இவ்வாறான செயல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. ஏனெனில், அவர்கள் சுதாரித்துக் கொண்டார்கள்.

மக்களாகிய நாம் எப்போது சுதாரித்துக் கொள்ளப் போகிறோம்?

நரேஷ்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

புதன் 16 மே 2018