மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

எண்ணெய்க் குழாயில் கசிவு: போலீஸார் குவிப்பு!

எண்ணெய்க் குழாயில் கசிவு: போலீஸார் குவிப்பு!

கதிராமங்கலம் அருகே மதகடி என்னும் இடத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைந்த எண்ணெய்க் குழாயைச் சரி செய்யும் பணி நேற்று (மே 15) தொடங்கியுள்ளதால், அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மதகடி மயானம் சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் வெளியேறிய கச்சா எண்ணெய் அருகில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள வயல்வெளியில் பாய்ந்து நெற்பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளன. அப்போது இந்த உடைப்பைச் சரிசெய்ய ஓஎன்ஜிசி அதிகாரிகளும் வருவாய்த் துறை அதிகாரிகளும் அங்கு வந்து எண்ணெய்க் கசிவைத் தற்காலிகமாக நிறுத்தினர்.

எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு 20 நாள்களுக்குப் பிறகு ஓஎன்ஜிசி நிறுவனம் குழாயைச் சரிசெய்யும் வேலையை நேற்று (மே 15) தொடங்கியுள்ளது. குழாய் சரிசெய்யும்போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறக் கூடாது என்பதற்காகக் காவல் துறையினர் 200 பேரை அப்பகுதியில் நேற்று குவித்திருந்தனர்.

உடைப்பு ஏற்பட்டு இருபது நாள்களுக்குப் பின்னர்தான் அதைச் சரிசெய்யும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்தப் பாதிப்புகளுக்கு காரணமாகக் கச்சா எண்ணெய்க் கிணறுகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கதிராமங்கலம் பகுதி மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon