மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

குழந்தைக் கடத்தல் கும்பலுக்கு டிஎன்ஏ டெஸ்ட்!

குழந்தைக் கடத்தல் கும்பலுக்கு டிஎன்ஏ டெஸ்ட்!

சென்னையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கஸ்தூரிபா மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆண்டு (2017) ஜூன் மாதம் பத்மினி என்ற பெண், கடத்தல் கும்பலிடம் இருந்து வாங்கிய குழந்தையைத் தனது குழந்தை எனக் கூறி நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின், இதுகுறித்து விசாரணை தீவிரம் அடைந்தது.

பத்மினிக்குக் குழந்தையை விற்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரிக்கி வர்மா, கோமல் வர்மா, அஜய் சர்மா மற்றும் ஜெய சர்மா ஆகிய நான்கு பேரையும், கடந்த 8ஆம் தேதி குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தங்களுடைய குழந்தையைத்தான் பத்மினிக்குக் கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குழந்தை யாருடையது என்ற உண்மையைக் கண்டறிவதற்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அரசு காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.

டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை குறித்து இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon