மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

அந்த மூணாவது கேள்வி என்னன்னா, டன் கணக்கில் எடையுடைய விமானங்கள் மட்டும் எப்படி புவியீர்ப்பு விசையைத் தாண்டி பறந்து, மிதந்து போகுது?

நேற்று நாம் பார்த்ததுபோல, ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் புவியீர்ப்பு விசை தனது ஆற்றலை இழக்கும். இதைவிட முக்கியமான ஒரு விஷயத்தை நாம் பார்த்திருக்கிறோம். அது பறவைகள் பறக்கும் அறிவியல் தொடர்பானது. ஞாபகம் இருக்கா குட்டீஸ்? அதான், பறவைகள் பறக்கணும்னா அதோட றெக்கைகளுக்குக் கீழ் உள்ள காற்றின் அழுத்தம் என்பது, அதற்கு மேல் உள்ள காற்றின் அழுத்தத்தைவிட அதிகம். அந்தக் காற்றின் அழுத்தம்தான் பறவையை மேல் நோக்கித் தள்ளுது.

ஞாபகம் வருகிற மாதிரி இருக்கா? சரி, இப்போ இது விமானங்களுக்கு எப்படி பொருந்தும்னு பார்க்கலாம்.

பறவைகள் மாதிரியே விமானத்துக்கு இறக்கைகள் இருக்கு. ஆனா, பறவைகள் மாதிரி காற்றைக் கீழ் நோக்கி தள்ளி அழுத்தத்தை உண்டாக்குற செயலை விமானத்தோட றெக்கைகள் செய்யுறதில்லை. அவை நிலையாக இருக்குது. பின்ன எப்படி பறக்க முடியுது?

பறவைகள்கிட்ட இல்லாத ஒரு சிறப்பம்சம் இந்த விமானங்கள்ல இருக்கு. அது என்னன்னா விமானத்தோட இயந்திரங்கள் (Engines). இதை புரிஞ்சுக்க ஒரு சின்ன சோதனையைப் பார்ப்போம்.

சோதனை:

ஒரு கல் எடுத்துத் தூக்கி வீசுறீங்க. அந்தக் கல் குறிப்பிட்ட தூரம் பறந்து போய் கீழே விழுது. அந்த ‘குறிப்பிட்ட தூரத்தை’ தீர்மானிக்கிறது யார்? அந்த தூரம் எதைப் பொறுத்தது?

விசை! சரியா சொன்னீங்க!

விசையைப் பொறுத்தது. ஆனால், யாரோட விசையைப் பொறுத்தது? உங்களோட விசையா? இல்ல, புவியீர்ப்பு விசையா?

இதுக்கான பதில்தான் விமானம் பறப்பதற்கான அறிவியல்...

நரேஷ்

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon