மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஏப் 2020

மீண்டும் ஐசிசி தலைவரான இந்தியர்!

மீண்டும் ஐசிசி தலைவரான இந்தியர்!

அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஐசிசியின் தலைவராக ஷஷாங்க் மனோகர் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவரான ஷஷாங்க் மனோகர், கடந்த 2016ஆம் ஆண்டு ஐசிசி வரலாற்றில் முதன்முறையாகப் போட்டியின்றித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது இரண்டாண்டு பதவிக்காலம் தற்போது முடிவடைந்ததையொட்டி மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இம்முறையும் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மீண்டும் ஐசிசியின் தலைவராக ஷஷாங்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போட்டியின்றி மீண்டும் தலைவர் பொறுப்பேற்ற ஷஷாங்க் மனோகர், “ஐசிசியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை கவுரவமாகக் கருதுகிறேன். இதற்குக் காரணமாக இருந்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2016ஆம் ஆண்டு நான் பதவியேற்றபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, இந்த இரண்டாண்டுகளில் நாங்கள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “அடுத்த இரண்டாண்டுகளில் மற்ற உறுப்பினர்களுடன் கூட்டு சேர்ந்து கிரிக்கெட்டில் ரசிக்கும்படியான பலவித மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon