மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 22 செப் 2019

சர்க்கரை தகவல்!

சர்க்கரை தகவல்!

தினப் பெட்டகம் 10 (16.05.2018)

இனிப்புச் சுவை நம் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் சர்க்கரை? காலையில் பருகும் காபி முதல் இரவில் குடிக்கும் பால் வரை சர்க்கரையை அடிக்கடி எடுத்துக்கொள்கிறோம். அந்தச் சர்க்கரை பற்றிய இனிப்பான சில தகவல்கள்:

1. எதுவும் கலக்காத 100 மில்லி பழச்சாற்றில் 12 கிராம் சர்க்கரை இருக்கிறது.

2. பல் பிரச்சினைகளுக்கு சர்க்கரை காரணமில்லை. சர்க்கரையைச் சாப்பிட்டு வளரும் கிருமிகள்தான் காரணம். இந்தக் கிருமிகள் மாவுச்சத்தையும் உட்கொள்ளும். இனிப்பு உணவுகளை முற்றிலும் நிறுத்தினாலும், மாவுச்சத்துள்ள உணவுகள் பல்லைக் கெடுக்கும்.

3. 16ஆம் நூற்றாண்டில், லண்டனில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையின் விலை 5 டாலர்.

4. மனிதன் பிறக்கும்போதே விரும்பி உண்ணும் சுவை இனிப்பு.

5. Cocaine என்ற போதைப் பொருளை விடச் சர்க்கரை அதிக அளவு நம்மை அடிமையாக்கிவிடும்.

6. 2001ஆம் ஆண்டு விண்வெளியில் சர்க்கரை இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

7. ஒரு டீஸ்பூன் சர்க்கரை வெறும் 15 கலோரிகள்தான்.

8. Lugduname என்ற பொருள்தான் உலகிலேயே மிகவும் இனிப்பானது. சர்க்கரையைவிட 2,00,000 மடங்கு அதிகம் இனிப்பானது.

9. சராசரியாக ஒரு நபர் ஆண்டொன்றுக்கு 24 கிலோ சர்க்கரை உட்கொள்கிறார். பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில் இந்த அளவு 33 கிலோ.

10. கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கும் முறை ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.

ஆஸிஃபா

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon