மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 22 செப் 2019

நடிப்பை முன்னிறுத்தும் நடிகர்: பகத் ஃபாசில்

நடிப்பை முன்னிறுத்தும் நடிகர்: பகத் ஃபாசில்

கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் நடிப்பதற்குச் சவாலான கதாபாத்திரம் என்றால் வில்லன் வேடமும் ஏற்கத் தயங்காத நடிகர்களில் ஒருவர் பகத் ஃபாசில். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

கதாநாயக நடிகர்கள் தங்களது மார்க்கெட் குறைந்த பின் வில்லன் வேடம் ஏற்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ரசிகர்கள், விமர்சகர்கள் எனப் பல தரப்பிலும் செல்வாக்குள்ள பகத் ஃபாசில் போன்ற இளம் நடிகர் கதாநாயக வேடம் ஏற்று நடித்துக்கொண்டிருக்கும்போதே வில்லன் வேடங்களையும் ஏற்று நடிப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மகேஷிண்ட பிரதிகாரம் திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றது. இந்த ஆண்டு வில்லன் வேடம் ஏற்று நடித்த ‘தொண்டி முதலும் த்ரிகாட்சியும்’ திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான விருதோடு சேர்த்து இவருக்கும் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றுத் தந்துள்ளது.

தற்போது அறிமுக இயக்குநர் மது சி.நாராயணன் இயக்கும் கும்பளங்கி நைட்ஸ் படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடிக்கவுள்ளார். சமகாலப் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு ஸ்யாம் புஸ்கரன் திரைக்கதை அமைத்துள்ளார். கேரளாவிலுள்ள கும்பளங்கி பகுதியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ஷானே நிகம், சௌபின் ஷாகிர், ஸ்ரீநாத் பாஸி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon