மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் நேரலை!

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் நேரலை!

சமூக ஊடகங்களில் இன்று (மே 16) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துறையினரிடம் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘சமூக ஊடகங்களில் ஸ்டார்ட் அப் இந்தியா சமூகத்தினருக்கான நேரலை நிகழ்ச்சியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் உதவி பெறவும் அது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதும் இந்த நேரலையின் நோக்கமாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நேரலை இன்று (மே 16) சுரேஷ் பிரபுவின் அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் நடைபெறுகிறது. அதோடு, ஸ்டார்ட் அப் இந்தியாவின் அதிகாரபூர்வ ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கத்திலும் நடைபெறுகிறது. இந்த நேரலையில் பங்கேற்க #AskPrabhu என்ற ஹேஷ் டேக்கைப் பங்கேற்பாளர்கள் பயன்படுத்தி தங்களது கேள்விகளைக் கேட்டுப் பயன் பெறலாம் என்றும், தேர்வு செய்யப்பட்ட கேள்விகளுக்கு சுரேஷ் பிரபு பதிலளிப்பார் எனவும் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon