மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

ஓய்வூதியம் பெற ஆதார் தேவையில்லை!

ஓய்வூதியம் பெற ஆதார் தேவையில்லை!

‘ஓய்வூதியம் பெற ஆதார் தேவையில்லை’ என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று (மே 15) தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சலுகைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் பணி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஆதார் எண்ணை வங்கியில் இணைத்து ஓய்வூதியம் பெறுவதில் சிரமத்துக்கு ஆளாகினர். இதையடுத்து தற்போது மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவைத் தளர்த்தியுள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனான 30ஆவது சந்திப்பு டெல்லியில் நேற்று (மே 15) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அரசு ஊழியர்களுக்கான மாநில இணையமைச்சர் ஜிதேந்திர சிங், “ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை தற்போது ரூ.9000 ஆகவும், மருத்துவ உதவித்தொகை ரூ.1000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பணிக்கொடை (gratuity) வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பணி ஓய்வுபெற்ற மூத்த மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதில் சிரமம் அடைவதாகத் தெரிவிக்கின்றனர். எனவே, மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது