மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

மல்லிகாவின் வித்தியாசப் போராட்டம்!

மல்லிகாவின் வித்தியாசப் போராட்டம்!

12 மணிநேர கூட்டுக்குள் அடைத்துக்கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் நடிகை மல்லிகா ஷெராவத்.

71ஆவது கான் திரைப்பட விழா மே 8ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில் ஐஸ்வர்யா ராய், ஹூமா குரேஷி, தீபிகா படுகோன், கங்கணா ரணாவத், சோனம் கபூர், தனுஷ், மல்லிகா ஷெராவத் போன்ற பலர் கலந்துகொண்டனர்.

நடிகை மல்லிகா ஷெராவத் சர்வதேச அரசு சாரா அமைப்பான 'Free A Girl India'-வின் தூதராகச் செயல்பட்டுவருகிறார். இந்த நிலையில் அவர், கான் திரைப்பட விழா நடைபெறும் இடத்தில், 12x8 அளவு கொண்ட சிறிய ஜெயில் கூண்டுக்குள் தன்னை அடைத்துக்கொண்டுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள மல்லிகா, “கான் திரைப்பட விழாவில் இது என்னுடைய 9ஆவது வருடம். இந்த விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் சென்று சேரும். இப்படி என்னை ஒரு சிறிய கூட்டுக்குள் அடைத்துக்கொள்வதால், சிறு பிள்ளைகள் வன்முறையின் காரணமாக எப்படிப்பட்ட கொடூர வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. இது, இந்தியாவில் மட்டுமல்ல. உலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கு பெண்களும் குழந்தைகளும் பலியாக்கப்படுகிறார்கள். அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அது குறித்தான வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon