மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

சொத்து வரி செலுத்த ஸ்மார்ட் கார்டு!

சொத்து வரி செலுத்த ஸ்மார்ட் கார்டு!

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, மின் கட்டணம், குடிநீர் வரி ஆகியவற்றிற்கு ஸ்மார்ட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இதற்காக, சென்னை மாநகராட்சி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து ஸ்மார்ட் கார்டு வசதியை உருவாக்கிவருகிறது. இந்த கார்டு அடுத்த மாதம் முதல் இ-சேவை மையங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் வசதியை விரைவில் உருவாக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நேற்று (மே 14) மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி நம்ம சென்னை செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்கள் பயன்பெறும் வகையில் இந்த செயலியில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்து வரி, தொழில் வரி, வர்த்தக உரிமம் போன்ற 5 சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த செயலி மூலம் மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பிறப்பு, இறப்பு, தொழில் வரி, சொத்துவரி மற்றும் வர்த்தக உரிமம் சான்றிதழ்கள், ரசீதுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் நிலைப்பாடு குறித்தும் அறிந்துகொள்ளலாம்.

இதை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 3,738 புகார்கள் பெறப்பட்டு அதில் 3,688 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 புகார்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon