மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

சபரிமலை கோயில் நடை திறப்பு!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

வைகாசி மாத பூஜைக்காக நேற்று (மே 14) மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும் கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

அதன்படி வைகாசி மாத பூஜைக்காக நேற்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி (பொறுப்பு) மனு நம்பூதிரி முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபாராதனை காட்டினார். அப்போது, பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். நேற்று கோயில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

இன்று (மே 15) அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

19ஆம் தேதி வரை இந்த பூஜைகள் நடைபெறவுள்ளன. 19ஆம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 15 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon