மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 14 டிச 2019

சென்னை: மேலும் ஒரு காவலர் தற்கொலை!

சென்னை: மேலும் ஒரு காவலர் தற்கொலை!

பணிச்சுமை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் போலீசார் தற்கொலை செய்துவரும் நிலையில் இன்று (மே 14) மேலும் ஒரு காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர் காவலர் பாலமுருகன் (28). இவர் இன்று (மே 14) காலை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாலமுருகன் சமீபத்தில் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்ததாகவும், இதனால் உயரதிகாரிகள் அவரைக் கடுமையாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீப காலமாக காவலர்கள் தற்கொலை என்பது தொடர் கதையாகி வருகிறது. காஞ்சிபுரம் அருகே துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்த சதீஷ்குமார் நேற்று முன்தினம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த மாதம் மட்டும் மூன்று காவலர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

காவலர்களின் பிரச்சினையைத் தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பது குறித்து 5 வாரத்துக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்குக் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 14 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon