மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 29 மே 2020

பாபா அசையவில்லை, ரஜினி அசைந்தார்!

பாபா அசையவில்லை, ரஜினி அசைந்தார்!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 70

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் நாணயமும், நம்பிக்கையும் அரிய பொருள்களாகவே இருந்துவருகின்றன. எனினும், குறிப்பிட்ட சில நிறுவனங்களும், தனி நபர்களும் லாபமோ நஷ்டமோ வாக்குத் தவறாமை, நாணயம் ஆகியவற்றை இன்று வரை கடைபிடித்து வருகின்றனர்.

எமோஷனல் ஏகாம்பரம் எனத் திரைத் துறையினரால் அழைக்கப்படும் நடிகர் - தயாரிப்பாளர் விஷால் 30 லட்ச ரூபாய் சொன்னபடி கொடுக்காமல் வாக்கு தவறியதால் தொழில் ரீதியாக அவரைப் பற்றிய தகவல்களைத் துப்பறிந்த நிறுவனமே ஊடகம் மூலம் வெளிப்படுத்திவிட்டது. விஷால் வாங்கிய கடனை அடைக்க அன்புச் செழியனுக்கு லைகா சார்பில் காசோலை வழங்கியபோதே சினிமா வட்டாரத்தில், ரஜினி, கமலை தொடர்ந்து விஷால் விலைபோகிறாரா அல்லது வாங்கப்படுகிறாரா என்ற விவாதம் எழுந்தது. விஷால் லைகா நிறுவனத்துடன் இணைந்துபோவது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமா? என்பதை பற்றிய விரிவான கட்டுரை விரைவில்...

இப்போது ரஜினி பற்றி பார்ப்போம். தனது ஆன்மிக குருவாக வணங்கும் சச்சிதானந்த ஸ்வாமிகளை 2002 ஆகஸ்ட் 14 அன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற ப்ரீமியர் காட்சிக்கு அழைத்து வந்திருந்தார் ரஜினி. அலைமோதிய கூட்டத்துக்கு நடுவே அமைதியாக வந்த ஸ்வாமிகள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். அரசியலும் ஆன்மிகமும் கலந்த கலவையாக பாபா இருக்கும் என யூகித்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியில்லை. ரஜினி ரசிகர்களாக ப்ரீமியர் காட்சியில் படம் பார்த்தவர்கள் கடுமையான ஏமாற்றமடைந்தனர்.

ப்ரீமியர் காட்சிக்கு நெருக்கடியான சூழலில் வந்து சென்ற ஸ்வாமி நள்ளிரவில் காலமானதாக தகவல் அறிந்த ரஜினிகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஆகஸ்ட் 15 காலையில் பாபா படம் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, எந்தத் தயக்கமும் இன்றி ஸ்வாமியின் உடலை எடுத்துக் கொண்டு விமானத்தில் அமெரிக்காவுக்குப் பறந்துகொண்டிருந்தார் ரஜினி. அவர் சென்ற விமானம் தரையிறங்கிய போது தமிழகத்தில் தரை தட்டிய கப்பலாக மோசமான தோல்வியைத் தழுவியிருந்தது பாபா.

திரைக்கு வந்த படம் வெற்றிப் படமாகிவிட்டால் அது தொடர்பான பாக்கிகள், பஞ்சாயத்துகள் உடனடியாக வெளிவராது. கஷ்டப்பட்டு முதல் நாள் எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்று பகல் காட்சிக்கு வாங்கி வைத்திருந்த பாபா பட டிக்கெட்டுகளை விலை குறைவாக, தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களே விற்றுக்கொண்டிருந்தனர். ரஜினிகாந்த் சம்பளம் இன்றி 9 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பாபா படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 15 கோடி வரை வியாபாரம் செய்யப்பட்டிருந்தது. பாபா படம் பூஜை முதல் படம் வெளியாகும் வரை அப்படம் சம்பந்தமான செய்திகளை வெளியிட ஒவ்வொரு வாரமும் பாபா பக்கம் எனத் தனியாகச் செய்திகளை வெளியிட்டுவந்தது விகடன் குழுமம். எந்தத் தமிழ் படத்திற்கும் இதுபோன்று முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

படத்தின் தோல்விக்கு லதா ரஜினிகாந்த் பாபா படத்தை வைத்து நடத்திய வசூல் வேட்டை ரசிகர்களை வெறுப்படையச் செய்தது முதல் காரணம். அவர்களுக்குப் பிடித்த படமாக இல்லாததால் அதனை ஊக்குவிக்க அவர்கள் முயற்சி எடுக்கவில்லை. பாபா படத்தைப் பற்றிய செய்திகள் இல்லாமல் அப்போது எந்தப் பத்திரிகையும் வந்ததில்லை. ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஊதிப் பெரிதாக்கிய படம் சினிமா ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை. படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம். லதா மூலம் ஸ்பான்சர் செய்த நிறுவன விளம்பரங்கள் இடம்பெறாததால் பணத்தைத் திருப்பிக் கேட்டு லதாவுக்கு நெருக்கடி. விற்காத கேசட்டின் பணத்தைத் திரும்பக் கேட்டு நெருக்கடி. என்ன செய்வது என்று தயாரிப்பு தரப்பில் பதில் சொல்ல ரஜினியின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி என்ன பதில் கூறினார்? திங்கள் (14.05.2018) பகல் 1 மணி அப்டேட்டில்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68 பகுதி 69

சனி, 12 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon