மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மே 2018

தமிழ்நாட்டுக்கே இழப்பீடு தரணுமே முதல்வரே :அப்டேட் குமாரு

தமிழ்நாட்டுக்கே இழப்பீடு தரணுமே முதல்வரே :அப்டேட் குமாரு

வழக்கமா சிட்டி உள்ளார தான் டிராஃபிக் ஆகும். இதென்ன வண்டலூர்லயே டிராஃபிக் ஆகியிருக்குன்னு வண்டலூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் கூட்டமா போயிட்ருந்தவங்களை நிறுத்தி விசாரிச்சேன். ‘ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு போறவங்கள மடக்கி அரெஸ்ட் பண்றாங்களாம்பா. வண்டியை உட்டுட்டு டிரெயின்ல போ சீக்கிரம் போய்டலாம்னாங்க. அதெல்லாம் முடியாது. இந்த குமாரு கட்டை கடைசி வரைக்கும் வண்டில தான் போகும்னு சொல்லி போராடி வந்து பாத்தா கூட்டமா நின்னுட்டு இருந்த போலீஸ் காரங்களை பாத்தா பாவமா இருந்துது. என்ன சார் யாராவது கிடைச்சாங்களான்னு கேட்டதுக்கு ‘அட ரெண்டு வண்டியை அரெஸ்ட் பண்ணதுமே அவங்க எல்ல்லாரும் இருக்க குரூப்ல மெஸேஜ் போட்டுட்டாங்க. வண்டில வந்தவங்களாம் இறங்கி மப்சல் கௌர்மெண்ட் பஸ்லயும், டிரெயின்லயும் போய்கிட்டு இருக்காங்க. நாங்க எப்படின்னாலும் இங்கயே தான் இருக்கணும். அதனால ஓரமா நிக்கிறோம்னார். ஏன் சார் டிரெயின்ல போறாங்கன்னு தெரியுதே, இந்தா இருக்க ஸ்டேஷன் போய் மடக்கலாம்லன்னு கேட்டதுக்கு ‘போராடுறது மக்கள் குணம். போராட்டம் சரி. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவலர்கள் கடமையும் சரி. அதை மீறிப்போனா ஒண்ணும் பண்ணமுடியாது. மக்கள் எண்ணம் தான் நல்ல சமுதாயத்துக்கு ஆதாரம்’ அப்படின்னு சொல்வாருன்னு எதிர்பாத்தேன். ஆனால், ‘நீ வேறப்பா. டிரெயின் செண்ட்ரல் கவர்ன்மெண்ட் பொருள். கையை வெச்சோம்னா யார் பதில் சொல்றது. அப்பறம் இங்கயே ரயில் மறியல் பண்ணிட்டாங்கன்னா அவ்வளவு தான்’ அப்படின்றார். சரி இங்க தான் இப்படின்னா, நம்ம மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வந்து மத்திய அரசுடன் இணக்கமா இல்லை. நிதி நிலைமை புரிஞ்சிக்கணும்னு பேசுறார். ஏன் சார், டாஸ்மாக்ல சம்பாதிச்ச பணம் எங்க போச்சு? வரி கட்டுன பணம் எங்க? இத்தனை நாளும் இணக்கமா இருந்து வாங்குன நிதி எங்க? ஆனா ஆட்சி மட்டும் நல்லா நடக்குதுன்னு ஒவ்வொரு மேடைலயும் கொக்கரிக்கும் முதல்வரைப் பேச சொல்லுங்க அப்படின்னு குமாரு கேக்கல. மக்கள் கேக்குறாங்க பதில் சொல்லுங்க. யாராச்சும் இறந்து போனாங்கன்னா என்ன ஏதுன்னு விசாரிக்க ஆர்டர் போடுறதுக்கு முன்னாடி இழப்பீடு தொகை அறிவிக்கிறதுக்கே முதல்வருக்கு நேரம் சரியா இருக்கும். நியாயமா பாத்தா, மக்கள் ஓட்டு போட்டு ஜெயிச்சும் ஒண்ணுமே பண்ணலையேன்னு அதிமுகவுக்கு ஓட்டு போட்ட அத்தனை மக்களுக்கும் இழப்பீட்டுத் தொகை தந்தா தான் சரியா வரணும். மோடி இப்படித்தான் இழப்பீடுத் தொகையா 15 லட்சம் அறிவிச்சாரு. ஆனா, இன்னும் ஒரு பைசாவும் வர்ல. அப்டேட்டைப் படிங்க நான் போய் ஜியோவுக்கு ரீசார்ஜ் பண்ணிட்டு வர்றேன்.

@Kozhiyaar

அருகிருப்பவர் கைப்பேசியை இயக்கும் பொழுது அதை எட்டி பார்க்கும் உந்துதல் எழாமல் இருந்தால் நீங்கள் ஓரளவு யோக்கியன் என்று பெருமைப்படடு கொள்ளலாம்!!

@Kozhiyaar

ஒரு சிலர் சாலையில் வாகனத்தை இயக்குவதை பார்த்தால், அவசர சிகிச்சை பகுதியில் முன்பதிவு செய்து விட்டு வந்ததை போலவே இருக்கிறது!!

@amuduarattai

பாயாசத்தை நாம், பந்தியில் உட்கார்ந்து குடிக்க வேண்டுமா, நடந்து கொண்டே குடிக்க வேண்டுமா என்ப்தை, நம் சேருக்கு பின்னே, சாப்பிட காத்திருப்பவரின் அவசரமே தீர்மானிக்கிறது.

@Kozhiyaar

அரசியல்வாதி விஜயகாந்த் போல் 'கிட்ட வாங்க, அட அடிக்க மாட்டேன் கிட்ட வாங்க' என்று அழைத்து விட்டு, ஹிரோ விஜயகாந்த் போல் பிரித்து மேய்கிறது வாழ்க்கை!!!

@ShivaP_Offl

நாட்டுல நடக்கிற நிகழ்வையும்,

நமக்கு நடக்கிற நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது,

போன ஜென்மத்துல வேற கிரகத்திலே”பாவம்”செஞ்சுட்டு இங்க வந்தோமா இல்ல “புண்ணியம்”செஞ்சுட்டு இங்கே வந்தோமாங்கிற”கன்பூசன்”

வராம இருப்பதில்லை..!!

@sultan_Twitz

வாகனத்தின் இரு சக்கரங்கள் போல அதிமுக கட்சியும், ஆட்சியும் செயல்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி #

அப்போ அந்த வாகனத்தை ஓட்டுற டிரைவர் மோடி தானே!

@sundartsp

தாமரைக்கு ஒட்டு போட்டா அல்வா குடுப்பாங்கன்னு தெரிஞ்சே அல்வா சாப்பிட தாமரை இலையை பயன்படுத்தி இருக்கான் தமிழன்

@ShivaP

காதலை மட்டும் ஒருதடவை இதயத்தில் இன்ஸ்டால் செய்துவிட்டால்..

இதயத்திலிருந்து அன்இன்ஸ்டால் செய்வது கடினம்...!!

@Kadharb32402180

நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் மக்கள் பாஜக வை ஆதரிக்க வேண்டும் - ஸ்மிரிதி இரானி

மேடம் நாட்டை காப்பாத்தனும் சரி அது யார் ட இருந்து காப்பாற்றனும்னு தெளிவா சொல்லிட்டு போங்க

@manipmp

உலகில் முதன்முதலில் Retweet செய்தது கொட்டாவியாகத்தான் இருக்கும்

@Amuthavanan47

கருப்பு பணத்தை மீட்டு அனைவருக்கும் அடுத்த ஆண்டு இலவச வீடு வழங்கப்படும் - பிரதமர் மோடி.

அடுத்த வருசம் மோடி : புஜிக்கு புஜிக்கு புஜிக்கு ...

@SKtwtz

வெட்ட வருபவனையும் தலைகுனிந்து ஏற்கும் இடம்...

சலூன் கடை....

@deepanrdx

நல்ல மதிப்பெண்கள் பல தொழிலாளிகளை உருவாக்குகிறது, மோசமான மதிப்பெண்கள் சில முதலாளிகளை உருவாக்குகிறது.!

@kds_twitz

வாகனத்தின் இரு சக்கரங்கள் போல அதிமுக கட்சியும், ஆட்சியும் செயல்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

//டூவீலர்க்கு எதுக்கு அச்சாணி(மோடி)

@ArunkumarTNR

உ.பி.யில் வெயிலின் தகிப்பை தணிக்க சாமி சிலைகளுக்கு ஏர் கூலர் - செய்தி.

அடுத்து அம்மா சமாதிக்கு ஏர் கூலருடன் புறப்பட்டது செல்லூர் ராஜி & விழுதுகள்.

@Aaathithamizhan

பெண்களின்

தெருச் சண்டையையும்

வீட்டுச் சண்டையையும்

குறைத்தது தொலைக்காட்சி

சீரியல்கள் என்றால்

ஆண்களின் விவாதங்களையும்

வீண் சண்டையையும்

குறைத்தது

ஸ்மார்ட் போன்கள்

@sultan_Twitz

உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாகவே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது - அமைச்சர் ஜெயக்குமார் #

உச்சநீதிமன்றம் டாஸ்மாக்கை கூடதான் மூட சொல்லி உத்தரவு போட்டுச்சி மூடுனிங்களா!?

@BoopatyMurugesh

தாத்தா : நான்லாம் என் காலத்துல 10 கிமீ நடந்தே போய் படிச்சவன்..

பேரன் : அப்ப நாங்கனாப்ல யாரு 3000கிமீ போய் நீட் எக்ஸாம் எழுதிட்டு வரோம்.. போவியா..

-லாக் ஆஃப்

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

செவ்வாய் 8 மே 2018