மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

ஐபிஎல்: ஹைதராபாத் நிலை!

ஐபிஎல்: ஹைதராபாத்  நிலை!

ஐபிஎல்லில் தற்போது எல்லா அணிகளும் கிட்டத்தட்ட 10 போட்டிகளை நிறைவு செய்து லீக் சுற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்த சீசனில் இதுவரை வெறும் இரண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ள ஹைதராபாத் அணி, ப்ளேஆஃப் வாய்ப்பினை பிரகாசமாக வைத்துள்ளது.

20 ஓவர் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு அணியின் வெற்றியானது கடைசி பந்தில் கூட கைமாறலாம். அப்படி இனிவரும் போட்டிகளின் முடிவுகள் இவ்வாறு அமைந்தால் ஹைதராபாத் அணி இந்த தொடரை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புள்ளது.

சூழ்நிலைகள்:

1. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இனிவரும் நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும்.

2. மும்பை அணி எஞ்சியுள்ள நான்கு போட்டிகளிலும் கட்டாய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.

3. சென்னை அணி ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளை வீழ்த்தி, பஞ்சாபுடன் தோல்வி அடைய வேண்டும்.

4. கொல்கத்தா அணி மும்பையிடம் தோற்று, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் வெற்றி பெற வேண்டும்.

5. பஞ்சாப் அணி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுடனான போட்டியில் வெற்றி பெற்று, கொல்கத்தா மும்பை அணிகளிடம் தோல்வியடைய வேண்டும்.

இவ்வாறாக நடந்தால் ஹைதராபாத் அணியின் நெட் ரன்ரேட் சரிந்து அந்த அணி ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்படும் வாய்ப்பும் உள்ளது.

ஹைதராபாத்-பெங்களூரு தீராப் பகை:

நடந்து முடிந்த 10 ஐபிஎல் சீசன்களில் பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றியதில்லை. இதற்கு ஒருவகையில் ஹைதராபாத்தும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

2009: ஹைதராபாத் அப்போது டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் களமிறங்கிய சமயம். அப்போது ஃபைனலில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் கோப்பையை வென்றது.

2012: வாழ்வா சாவா என்னும் நிலையில் இருந்த பெங்களூரு அணியைக் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

2013: லீக் சுற்றில் ஹைதராபாத் அணி கொல்கத்தாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றி பெங்களூரை வெளியேற்றியது.

2016: இந்த முறை மீண்டும் ஃபைனலில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் கோப்பையை வென்றது.

2018: நேற்றைய போட்டியில் ஹைதராபாத் பெங்களூரை வீழ்த்தி, அதன் ப்ளேஆஃப் கனவைத் தகர்த்தது.

-முத்துப்பாண்டி யோகானந்த்

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon