மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

மாம்பழ ஏற்றுமதி: வஞ்சிக்கப்பட்ட தமிழகம்!

மாம்பழ ஏற்றுமதி: வஞ்சிக்கப்பட்ட தமிழகம்!

மலேசியாவில் தென்னிந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தமிழக ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்தியாவிலிருந்து மலேசியாவுக்குப் பாரம்பரியமாக மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இதில் தமிழ்நாடு பெரும்பங்கு வகிக்கிறது. மாம்பழங்கள் மீதான அந்துப் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்க தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறி தற்போது தென்னிந்திய மாம்பழங்களுக்கு மலேசிய மாகாணங்கள் தடை விதித்துள்ளன.

இருப்பினும் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அந்துப் பூச்சி தாக்குதல் இல்லாத மாம்பழங்கள் ஏற்றுமதிக்கு மலேசிய மாகாணங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த மாம்பழ உற்பத்தியில் இந்த மூன்று மாநிலங்களும் மூன்றில் ஒரு பங்கு அளவைக் கொண்டுள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு 186 லட்சம் டன் அளவிலான மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன. மலேசியாவைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு 10,000 டன் அளவிலான மாம்பழங்களை இறக்குமதி செய்கிறது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாயாகும்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மாம்பழ ஏற்றுமதியாளர்கள் இந்தச் சிக்கலைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் வட மாநிலங்களிலிருந்து ஏற்றுமதி அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon