மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

அதர்வாவுக்குப் படக் குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அதர்வாவுக்குப் படக் குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

புதுமையை விரும்பும் நடிகரான அதர்வா, தனது பிறந்த நாளை படக் குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிப்பைத் தாண்டி கேரக்டர்களுக்கு உயிர் கொடுப்பதற்காக தனது உடலை வருத்தி நடிப்பவர்கள் சிலர். அதில் இளம் தலைமுறை நடிகரான அதர்வா, பரதேசி உள்ளிட்ட தனது முந்தைய படங்களில் கேரக்டருக்காக தனது தோற்ற அமைப்பை மாற்றிக் காட்டினார். தற்போது அவர் நடித்துவரும் பூமராங் படத்துக்காக மூன்று கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அதர்வாவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மேயாத மான் திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் நேற்று (மே 7) அதர்வாவின் பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளது படக்குழு.

அதர்வாவின் செம போதை ஆகாத திரைப்படம் மே 18ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும், அதர்வா நடிப்பில் ஒத்தைக்கு ஒத்தை, ருக்மணி வண்டி வருது, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் தயாராகிவருகின்றன.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon