மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

தொடரும் ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சை!

தொடரும் ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சை!

ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக பிரபல நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் , நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் சுசி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகி கோலிவுட்டை அதிரவைத்ததைப் போல தெலுங்கு சினிமாவுலகை அதிரவைத்து வரும் ஒன்று ஸ்ரீ லீக்ஸ். பட வாய்ப்பு தேடும் பெண்களை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உறவுக்கு அழைப்பதாக குற்றம் சாட்டியதுடன் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச படங்களை வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் உள்ள அனைவரையுமே அதிரவைத்தார் ஸ்ரீரெட்டி.

ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பாலியல் புகார்கள் அளித்துவந்தாலும் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சியடைந்ததே ஒழிய பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவில்லை. தெலங்கானா அரசும் இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்தது. இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு தெலங்கானா தலைமைச் செயலருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலருக்கும் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம், ஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்கியது.

ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக இயக்குநர் ராம்கோபால் வர்மா மற்றும் சில பெண்கள் அமைப்பு ஆதரவாக இருந்து வருகிறது. ஸ்ரீ லீக்ஸ் மூலம் இயக்குநர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் ஆகியோரைப் பற்றி வெளியிட்டதுடன், சில நாட்களாக மௌனம் காத்துவந்த ஸ்ரீரெட்டி, தற்போது நடிகர் நானி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் நானி, தமிழில் நடிகை சமந்தாவுடன் ராஜமௌலி இயக்கிய நான் ஈ, கௌதம் மேனன் இயக்கிய 'வெப்பம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். விரைவில் ஆரம்பமாக உள்ள பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியையும் இவர் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon