மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

ரசிகர்களுக்கு ஹெலிகாப்டர் ரைடு!

ரசிகர்களுக்கு ஹெலிகாப்டர் ரைடு!

‘நடிகன் அல்லது நடிகையின் பின்னால் போவதால் உனக்குக் கிடைக்கும் பயன் என்ன?’ கேள்வியை எதிர்கொள்ளாத ரசிகர்கள் குறைவு. பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் கேள்விக்கான விடையைக் கொடுத்திருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தனது ரசிகர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று அவர்களை மகிழ்வித்திருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங்கின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன் கடந்த மார்ச் மாத இறுதியில் தொடங்கப்பட்டது. அதில் இணைந்து ரகுலின் அன்றாட வாழ்வை கவனிப்பதும், திரைப்படங்களைக் கொண்டாடுவதும் பொழுதுபோக்காகவே அவரது ரசிகர்கள் பின்பற்றிவந்தனர். ரகுலுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் ரசிகர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதன்படி போட்டியில் வெற்றிபெறுபவர்களை தன்னுடன் ஹெலிகாப்டர் ரைடுக்கு அழைத்து செல்வதாகவும் வாக்கு கொடுத்திருந்தார். இப்போட்டியில் நீதா, சுமந்த் கங்கா, அமித் குமார் ஆகிய மூன்று ரசிகர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, அவருடன் ஹெலிகாப்டரில் பயணித்தார்கள்.

போட்டி குறித்து பதிவு செய்துள்ள ரகுல் “நான் பயணம் செய்வதை அதிகம் விரும்பும் கேரக்டர். எனது அனுபவத்தை என் ரசிகர்களும் பெறவேண்டும் என்று விரும்பினேன். என்னிடம் தனிப்பட்ட அப்ளிகேஷன் இருப்பதால், உண்மையான ரசிகர்களை மட்டும் பார்க்கும் வசதி அதிகம் இருந்தது. எனவே, போட்டியை அறிவித்து வெற்றியாளர்களுடன் பயணித்தேன்” என்கிறார். ஹெலிகாப்டர் பயணத்தின்போது தனது ரசிகர்களைப் பற்றி அதிகம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும். எதிர்காலத்தில் எப்படிப்பட்ட போட்டிகளை நடத்தி, இதேபோல ரசிகர்களை மகிழ்விக்கலாம் என்றும் யோசித்ததாகவும் கூறியிருக்கிறார்.

செவ்வாய், 8 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon